தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிறிஸ்டன் …

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, 2011ம் ஆண்டு உலகக்கோப்பை வென்றதில் மிக முக்கிய பங்காற்றிய அப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்,  கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

அதோடு   அடுத்த ஐ.பி.எல் தொடருக்கான பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் கேரி கிறிஸ்டன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் கேரி கிறிஸ்டன் விண்ணபித்துள்ளார்.

இதேவேளை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான ரேஸில் கேரி கிறிஸ்டனின் பெயரே முதலில் உள்ளதாக பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...