Designed by Iniyas LTD
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இலங்கையின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி – சமந்தாபவர்..
மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனை ஐ.நாவுக்கான அமெரிக்கா முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக , தகவல் வெளியானதை அடுத்தே, அவர்இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , நாடாளுமன்றத்தைக் கலைத்து இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள் சமந்தா பவர், இது இலங்கையின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்வும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.