தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 24 தொகுதிகள்

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.India-Educational

அதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு இந்த நிலையில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நேற்று மாலை நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டார். வேட்பாளர்களை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்துவைத்தார்.

நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், மாநில பொது செயலாளர் மோகன்ராஜூலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.   மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சி செய்து தமிழகத்தை இருண்ட மாநிலமாக ஆக்கியுள்ளன. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பொருளாதார நிலையை உயர்த்துவதுடன், வேலைவாய்ப்புகளை அதிகரித்து ஒரு லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு நாங்கள் கொண்டுவருவோம்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். தேசிய நீரோட்டத்திற்கு வாருங்கள். தேசிய அரசியலில் இணைந்தால் தான் தமிழகத்தை மேம்படுத்த முடியும்’’ என்றார்.

Comments
Loading...