தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் அரசுடமையாக்கப்படும்: மகிந்த அமரவீர

mahinda-amaraweera-300x200தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் அரசுடமையாக்கப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுவதாக தெரிவித்தார்.

எல்லை தாண்டி மீன்பிடித்த புகாரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், ஆனால், அவர்களது படகுகள் விடுவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

Comments
Loading...