தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 330 பேர் பலி

earthquake05_3483381bபாகிஸ்தானில், நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330-ஐ தாண்டியுள்ளது. பாகிஸ்தானின் வடக்கு மலைப் பிரதேசங்களில் மட்டும் 253 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

 ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலின் வடகிழக்கே ஜர்ம் பகுதியில் 213 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாயந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இருக்கும் பாகிஸ்தானின் கெபெர் பாக்துன்வா, பெஷாவர், கில்ஜிட் பலுசிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது.

 இதனால், அங்கு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஷீல் ஷெரிப் ஆய்வு மேற்கொண்டார்.

Comments
Loading...