Designed by Iniyas LTD
இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைத்தில் வெடிகுண்டு புரளி- விமான நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் தொலைபேசியில் அழைப்பு வந்தது அதில் கூறிய மர்ம ஆசாமி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறினான். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பலத்த சோதனை செய்தனர். அனைத்து விமானங்களும் பலத்த சோதனைக்கு பிறகு விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் தகவல் கொடுத்த மர்ம நபரை புதுடெல்லி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த புரளியால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது இருப்பினும் வெடிகுண்டு புரளியால் விமான நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.