Designed by Iniyas LTD
இந்தோனேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு…
இந்தோனேசியாவில் நேற்றையதினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டநிலையில் இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.இதன்பின் நேற்று சுலவேசி தீவை சக்தி வாய்ந்த சுனாமி தாக்கியது.
இதன்போது குறிப்பாக பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்ப்புக்கு உள்ளதாகியுள்ளன.
ஆழிப்பேரலைகள் 6 அடி உயரத்திற்கு எழுந்த நிலையில் கடலோர பகுதிகளை முழுவதும் அது சூறையாடி உள்ளது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டில் உள்ள பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

