Designed by Iniyas LTD
இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி – 43 பேர் பலி..
மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா – சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டதில் , 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் திடீரென சுனாமி அலை தாக்கியது.
இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 430 வீடுகள், 9 ஹோட்ட்கள், 10 படகுகள் சேதமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என இந்தோனேசிய பேரிடர் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

