தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்நிலையில் சுவீகரிக்கப்பட்ட சம்பூர் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பது எப்போது?

சம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் காணி புதிய ஜனாதிபதித் தெரிவின்பின்னர் மீள ஒப்படைக்கப்படுமா? சம்பூர் குடியிருப்புக்காணிகள் அனல் மின்நிலையம் என்ற போர்வையில் ஜனாதிபதி பாரியார் சிராந்தி ராஜபக்ஸவின் சகோதரரால் சுவீகரிக்கப்பட்டன. இது அப்பிரதேச மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தியாக வெளிவந்தது. நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த மூதூர் பிரதேச தமிழ் மக்களும் மைத்திரிக்கு வாக்களித்து மகிந்தவிற்கான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.sampoor

இந்நிலையில் சுவீகரிக்கப்பட்ட சம்பூர் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பது எப்போது? என்ற கேள்வி அனைத்துப்பிரதேச மக்களிடமும் எழுந்துள்ளது. அகதி முகாம்களில் துன்பப்படும் மக்களுக்கு விரைவில் விடிவைக் கொடுக்குமாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடம் அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதைவிட சம்பூர் மக்களைக் குடியேற்றுகின்றோம் எனச் சொல்லிக்கொண்டு திரிந்த கோடரிக்காம்புகளும் அடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

Comments
Loading...