தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை இந்த ஆண்டிற்குள் முன்வைக்க வேண்டும்

இலங்கை  அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.  VPerumalaa

திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில் இடம்பெற்ற மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் நேற்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இடம்பெற்றது.  கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இவ்வாறு தெரிவித்தார்.  இலங்கையின்  நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்,நாட்டிலுள்ள மக்கள் இது நல்லாட்சி தான் என்று உணரும் வகையில் அரசு செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வை தற்பொழுது ஆட்சியில் இருக்கின்ற கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் தெரிவித்திருந்தது.  2016 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அரசியல் தீர்வுக்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று கூறுகின்ற தீர்மானம் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினுடைய மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.  இலங்கையின் இனங்களுக்கிடையில், நல்லிணக்கம் ஒன்றை ஏற்டுபடு த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாகக் கூறியிரு ந்தார்கள். அதற்காக ஆங்காங்கே சில வேலைத்திட்டங்களை எடுத்திருக்கி ன்றார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.

இனங்களுக்கிடையில் விரைவான நல்லிணக்க முயற்சிகள் தேவைப்படுகின்றன. இதற்கான திட்டங்களை விரிவாகவும் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலும் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான நல்லிணக்கத்திற்கு தடையாகவுள்ள அனைத்து விவகாரங்களையும் ஒரு தீர்மானகரமாக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும்.  நல்லாட்சி என்பது மக்களுக்கு நல்ல வாழ்வை தருவதாக அமைய வேண்டும். அபிவிருத்திகளை முன்னேற்ற வேண்டும்.

மக்கள் தமது வருமானத்திற்குள் நிறைந்த வாழ்வைப் பெறுவதாக இருக்க வேண்டும். ஆனால் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கை என்பதில் தற்போதைய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.  பொருட்களின் விலைகளோ மக்கள் தாங்கமுடியாத அளவிற்கு இருக்கின்றது. எனவே இந்த நிலைகளை மாற்றி மக்களுடைய அன்றாட வாழ்க்கைகளோடும் தேவைகளோடும் தொடர்புபட்டு சகல விடயங்களிலும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம்  விரைவுபடுத்த வேண்டும் என்றும் வரதராஜப் பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments
Loading...