Designed by Iniyas LTD
தமிழ் மக்களின் தீர்வில் ஐயப்பாடு காணப்படுகின்றது – சித்தார்த்தன்
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கா விட்டால், அதில் நிச்சயமாக பங்குதாரராக இருக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் மு.திருநாவுக்கரசு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
புதிய அரசியலமைப்பை குழப்பும் அனைத்து செயற்பாடுகளையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது எந்தவகையில் சாத்தியமாகும் என்ற ஐயப்பாடு காணப்படுவதாக சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்வுத்திட்டம், நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் குழப்பப்பட்டதை சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், தற்போது மஹிந்தவுக்கு காணப்படும் பலம், ஆதரவு என்பவற்றிற்கு மத்தியில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்டார்