தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்று அதிகாலை பளையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி..

பளைப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட  விபத்தில் மீசாலையை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பளைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் இருந்து  புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி வந்த ஹையேஸ்ரக வான் மோதுண்டுள்ளது.

இந்த விபத்தில்  ஹையேஸ் வாகனத்தை ஓட்டிய    மீசாலை மேற்கை சேர்ந்த பேருந்து சாரதி  ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...