தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுதந்திரபுரம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது மக்கள் கதறல்..

1111

இன்று காலை 7.30 மணியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு வடக்கில்,சுதந்திரபுரத்தின் ஒரு பகுதி சிங்களப்படைகளாலும் மற்றும் காவல்துறைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

. கைதுசெய்யப்பட்ட மக்கள் தெலைபேசிவாயிலாக தகவல்தெரிவித்து கதறி அழுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் யுவதிகளை சுதந்திரபுரம் பொது மைதானத்துக்கு இழுத்துச்சென்று கொண்டிருப்பதாகவும். இச்சுற்றி வளைப்பு மற்றும் சட்டவிரோத கைதுகளையடுத்து அப்பிரதேசம் எங்கும் ஒருவித பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் பீதியடைந்த நிலையில் காணப்படுவதையும் அவர்களின் தொலைபேசி அழைப்பு குரல்களிலிருந்து உணர முடிகின்றது.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்மை நாமே ஆளுகின்ற சுயகௌரவ வாழ்வுக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், தமிழர் பிரதிநிதிகளும், ஐநா சபையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்களை அச்சுறுத்தும், அடக்கி ஆளும் இத்தகைய சுற்றி வளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகள் எவ்வகையிலும் இன நல்லிணக்கத்துக்கு ஆரோக்கியமானதாக அமையாது.

ஈழத்தமிழர் இனப்பிரச்சினையில் சர்வதேச சமுகம் கற்றுக்கொள்ள வேண்டிய விடையங்கள் நிறையவே உண்டு என்பதையே, சிறீலங்கா அரசின் இத்தகைய ஏதேச்சதிகார நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

நேற்று இதுபோன்று கிளிநொச்சி நகர அண்டிய பகுதிகளில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது .தற்போது சிங்களப்படைகளால் தமிழர்தாயகம் குறிப்பாக வன்னிப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதோடு கடத்தல்களும் காணாமல்போதல்களும் நடைபெறுவது அதிகரித்து வருவதால் அங்கு மக்கள் அச்சத்துடன் என்னநடக்கப்போகின்றது என்று தெரியாமல் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...