Designed by Iniyas LTD
இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள் மீண்டும் முளை கொள்வோம்!
2009 மே 18ல் தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தின் ஆறாத வடுக்களாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஏக்கத்துடனும் கவலையுடனும் பதறிய நிலையில் தம்முயிர்களை துறந்த தமிழனின் வரலாற்றில் மறக்க முடியாத துயரநாள் மே 18.

நீண்ட பெருவலிஉடன் எம் உறவுகளின் இறுதி மூச்சு காற்று தாயக மண்ணிலே புதையுண்டு ,எரியுண்டு ,கதற கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எம் நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு .
எமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக இணைந்து தொடரக் கூடிய பயணமே, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு விடிவைத் தேடித் தரும்.
முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் புதையுண்ட உறவுகளுக்காய் இன்றைய நாளில் ஒளியேற்றும் தீபத்தின் சுடர் ஒளியில், தமிழரின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பயணம் தொடரட்டும்.
– செண்பகம் குழுமத்தினர்-