தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை! இதுதான் நல்லாட்சி அரசு!

நாளை முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாயலத்துக்கு அருகில் இறுதிப்போரில் இறந்தோருக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தடை உத்தரவு கையளிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்நிகழ்வை ஒழுங்குபடுத்திருந்த அருட்தந்தை இராணுவத்தால் அழைக்கப்பட்டு நேற்று எச்சரிக்கப்பட்ட நிலையில் இன்று தடை விதித்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் காரணம் காட்டி நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...