Designed by Iniyas LTD
இன்று லோரன்ட் பக்கோ! நாளை ராஜபக்ச?
மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐவரிகோஸ்டின் முன்னாள் ஜனாதிபதி லோரன்ட் பக்கோவிற்கு எதிரான விசாரணைகள் ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளன.
2010 இல் அவர் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் நாட்டில் வெடித்த உள்நாட்டு கலவரங்கள் தொடர்பாகவே இவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.குறிப்பிட்ட விசாரணைகள் நான்கு வருடத்திற்கு நீடிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2010 இல் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பதவிவிலக மறுத்த லோரன்ட் பக்கோ தனது நாட்டில் வன்முறைகளை உருவாக்கினார்.அடுத்த ஐந்து மாதங்களாக போட்டிக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 3000 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், அவ்வேளையும் பக்கோ அரண்மனையிலிருந்து வெளியேற மறுத்தார்.
தொடர்புடைய பதிவு
எனினும் பின்னர் இவர் தேர்தலில் வென்ற ஜனாதிபதி ஒட்டாராவின் படையினரால் 2011 ஏப்பிரலில் கைதுசெய்யப்பட்டார்,பிரான்ஸ் படையினரும் இதற்கு உதவிபுரிந்தனர்.அடுத்த வருடம் இவர் ஹேக்கிற்கு நாடுகடத்தப்பட்டார்.
ஜவரிகோஸ்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணைகள் சர்வதேகுற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றில் மிக முக்கியமானவையாக விளங்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் உலகின் மிகவும் அதிகாரம் வாய்ந்த தலைவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது,அதனால் விசாரிக்கப்படும் உலக நாடொன்றின் முதலாவது தலைவராக ஐவரிகோஸ்டின் முன்னாள்; ஜனாதிபதி காணப்படுகின்றார்.
லோரன்ட் பக்கோ சர்வதேச குற்றவியலில் நிறுத்தப்படவுள்ள நிகழ்வு இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கனவத்தை ஈர்த்துள்ளது. ராஜபக்ச உள்ள தரப்பினர் எப்போது தண்டிக்கப்படுவார்கள் தமிழ் மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் போன்ற எதிர்பார்ப்புக்கள் வலுத்துள்ளன.
