Designed by Iniyas LTD
இன்று 750 கிலோ வரையிலான போதைப் பொருட்கள் அழிப்பு
அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகை போதைப் பொருட்களில் 750 கிலோ வரையிலான போதைப் பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவும், போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போதைப்பொருட்கள் ஜனாதிபதி முன்னிலையிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.