தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தவர்கள் அரசியல் வாதிகள் – விஜயகலா மகேஸ்வரன்….

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற பெயரில்  அரசியல் வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார்-அடம்பன் மகா வித்தியாலயத்தில் நேற்று  இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

நெல்லை அறுவடை செய்ய விதைப்பது போல் வடக்கில் போதைப் பொருட்களை விதைப்பதற்கு அரசியல் வாதிகளே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள்  தங்களுடைய சுய இலாபத்திற்காக தங்களுடைய வாகனங்களிலே போதை பொருட்களை கொண்டு செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள்  என  குறிப்பிடும் போது பொலிஸார்  வாகங்களை சோதனையிடுவதில்லை எனவும் அந்த வாகனத்தில் என்ன போகின்றது என்பது தெரியாமல் தான் கடந்த காலங்களில் போதை பொருட்கள் அதிகம் எமது பிரதேசங்களுக்குள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.

இதன்  காரணமாகவே  சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வல்லுறவு போன்ற பிரச்சினைகள் எமது பிரதேசங்களில் அதிகரித்து காணப்படுகின்றதாகவும்  கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...