Designed by Iniyas LTD
இன்றைய இராசிபலன்கள் ..
மேக்ஷம்
இன்று பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. . பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேலதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.
ரிக்ஷபம்
இன்று வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம்.
மிதுனம்
இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது.
கடகம்
இன்று பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம்.
சிம்மம்
இன்று மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும்.
கன்னி
இன்று உத்தியோகத்தர்களுக்கு அதிக வேலைப் பளுவைச் சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரணையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்.
துலாம்
இன்று வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளைத் திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் இலாபத்தையும் அள்ளுவீர்கள்.
விருட்சிகம்
இன்று எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.
தனுசு
இன்று வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பப் பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.
மகரம்
இன்று சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம்.
கும்பம்
இன்று வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது. கலைத்துறையினருக்கு நன்மைகள் கூடும் .
மீனம்
இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்துக் காரிய வெற்றி பெறலாம். தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.