தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய இராசிபலன்கள் ….

மேக்ஷம்

இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

ரிக்ஷபம்

சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராகவிருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

மிதுனம்

சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.  வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

கடகம்

இன்று மதிப்பு, மரியாதை கூடிச் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.

சிம்மம்

இன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தைப் பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

கன்னி

இன்று உடன் பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

துலாம்

இன்று வீடு, மனை வாங்க தடை,சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் செய்வதற்கும் தடையாகவிருந்து வந்த நிலைமைகள் மாறும். தாயாருடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும்.

விருட்சிகம்

இன்று செலவினங்கள் குறையும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.  நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.

தனுசு

இன்று  வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.

மகரம்

இன்று புகழ், பாராட்டு வந்து சேரும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும்.

கும்பம்

இன்று தடங்கலின்றி எல்லாக் காரியத்தையும் முடிப்பீர்கள். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். ராசிநாதன் சனியுடன் இருக்கும் சூரியன் வீண் மனக் கவலையை உண்டாக்குவார்.

மீனம்

இன்று எதிலும் கவனமாகவிருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும்.

Comments
Loading...