Designed by Iniyas LTD
இலங்கையில் சமுக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை…
சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதற்காக இராணுவத்தில் விஷேட பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறை பரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவத்தின் பின்னரே இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு சமூக வலைத்தளங்கள் ஊடான பயங்கரவாதம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து கண்காணிப்பதற்காக இராணுவம் விஷேட பிரிவினை ஸ்தாபித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இம் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு செயலமர்வில் சமூக ஊடகம் மற்றும் நம்பகதன்மை என்ற தலைப்பில் கீழ் குறித்த விடயம் தொடர்பில்விசேட ஆய்வினை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..