Designed by Iniyas LTD
இன்றைய இராசி பலன்கள் ….
மேக்ஷம்
இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை. முன்னோர்களை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும், அறிவுத் திறனும் அதிகரிக்கும்.
ரிக்ஷபம்
எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். திடீர்ச் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றிக் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் இலாபம் கூடும்.
மிதுனம்
இன்று புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாகச் செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. பிள்ளைகள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர்.
கடகம்
இன்று படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிலும் கெளரவமான நிலையை அடைவீர். பூர்வசொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்ப்பந்தம் தரும் கடன்களைப் பெருமளவில் சரிசெய்வீர்கள். தொட்டது துலங்கும்.
சிம்மம்
இன்று புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர். வாழ்க்கைத் துணையுடன் அமைதியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் முரட்டுத்தனத்தை விட்டுவிட்டுச் சற்று இறங்கி வாருங்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். உங்களுக்குப் பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
துலாம்
இன்று இலாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்யத் தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது. நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
விருட்சிகம்
இன்று உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். தொழிலதிபர்கள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்துத் தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்றத் தொழில் செய்வோருக்கும் தாராள இலாபம் உண்டு. தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும்.
தனுசு
இன்று மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்துச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டுச் சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாகத் தொழில் ஆரம்பிக்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் ஆரம்பிக்கலாம்.
மகரம்
இன்று வியாபாரச் சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பதவி வரும். உத்தொயோகஸ்தர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக முடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்புத் தருவர். பணவரவு திருப்திகரமாகவிருக்கும்.
கும்பம்
இன்று சமூகத்தில் நன்மதிப்புக் கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள். பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்குப் பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப்பெறுவர்.
மீனம்
இன்று குடும்பசெலவுக்கான பணவசதி திருப்திகரமாகவிருக்கும். உறவினர் வீட்டுச் சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர். உபரி வருமானம் அபிவிருத்திப் பணிகளுக்குப் பயன்படும்.