Designed by Iniyas LTD
நவாலிப் படுகொலை – 23 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இலங்கை வான்படையின் வானூர்தித் தாக்குதலில் ஒரே தடவையில் 147 பேரைக் காவு கொண்ட நவாலிப் படுகொலையின் 23ஆவது நினைவு நாள் இன்று.
கடந்த 1995ஆம் ஆண்டு இதே நாளில், ‘லீப்டோர் வேர்ட்’ என்ற முன்னோக்கிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையினால், நவாலியில் மக்கள் ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்தனர்.
இலங்கை வான்படையின் காட்டுமிராண்டித்தனமாக மக்கள் தஞ்சம் அடைந்த ஆலயங்கள் மீது 13 குண்டுகளைத் தொடர்ச்சியாக வீசியது.
வான்படையின் ஈவுஇரக்கமற்ற இந்தக் குண்டுவீச்சில், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பணியாளர்கள் எனப் பலரும் துடிதுடித்து ஒரு நொடிப் பொழுதில் சாவைத் தழுவிய கொடூரம் அரங்கேறியது.
இந்தத் தாக்குதலில் சாவைத் தழுவியோர் நினைவாக, நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் இன்று சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

