Designed by Iniyas LTD
இன்றைய ஐபிஎ இல் குஜராத் லயன்ஸ்– ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 15–வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ்– ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் ராஜ்கோட்டில் நடக்கிறது. சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 3 ஆட்டத்தில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றது.
பஞ்சாப், மும்பை, புனே ஆகிய அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் மூன்று ஆட்டத்திலும் அரை சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார். மெக்குல்லம், தினேஷ் கார்த்திக், பிரோவோ, ஜடேஜா, பிரவீன் குமார், ஜேம்ஸ் பவுல்னெர், தாம்பே போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் குஜராத் அணியின் பீல்டிங் அபாரமாக இருக்கிறது. தொடர்ந்து 4–வது வெற்றியை பெறும் முனைப்பில் குஜராத் உள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றது. மும்பை அணியை வீழ்த்தியது. பெங்களூர், கொல்கத்தாவிடம் தோற்றது. அந்த அணி பேட்டிங்கில் டேவிட் வார்னர், இயன் மோர்சஸ் ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளது.
மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக தொடருக்கு வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வரையில் உள்ளது. இதனால் அவர் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் பரிந்தர் ஸ்ரன், முஸ்தாபிஜுர் ரகுமான் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியதால் ஐதராபாத் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.