Designed by Iniyas LTD
இன்றைய ராசிபலன்..
மேஷம்:
உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகும். மிதமான பணவரவு கிடைக்கும்.
ரிஷபம்:
இளமைக்கால நண்பரை சந்திப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள்.
மிதுனம்:
எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் முன்யோசனை அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும்
கடகம்:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேறி பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும்.
சிம்மம்:
நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சுறுசுறுப்பாக பணிபுரிவீர்கள்.
கன்னி:
தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம். உங்களின் நற்குணம் மாறாமல் செயல்படுவீர்கள் .தொழில் வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
துலாம்:
உங்களை சிலர் குறை சொல்ல நேரிடலாம். சகிப்புத் தன்மையுடன் பொறுமை காப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவை.
விருச்சிகம்:
நண்பர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும்.
தனுசு:
இஷ்ட தெய்வ அருளால் முக்கியமான செயல் நிறைவேறும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.
மகரம்:
உங்கள் செயல்களில் நிதானம் பின்பற்றவும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவர்களிடம் சண்டை, சச்சரவு வேண்டாம்.முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும்.
கும்பம்:
உடல்நலத்தில் அக்கறை வேண்டும். திட்டமிட்ட செயல் நிறைவேறுவதில் தாமதம் இருக்கும்.தொழில், வியாபாரம் சீர்பெற நண்பரால் உதவி உண்டு.
மீனம்:
வெளிவட்டார பழக்கத்தால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். சேமிக்கும் விதத்தில் தாராள அளவில் பணவரவு கிடைக்கும்.