Designed by Iniyas LTD
வாள் வெட்டு குழுவினர் 8 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது.
வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த எட்டுப் பேரை மானிப்பாய்ப் பொலிஸார் யாழ். சாவகச்சேரிப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மானிப்பாய்ப் பொலிஸார் நேற்றைய தினம் சாவகச்சேரிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது அவர்கள வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் தாம் விபத்தில் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கைதானவர்களின் கையடக்கத் தொலைபேசி மூலமாக கைதான நண்பர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டது.
குறித்த ஐவரும் தம் நண்பர்களைப் பார்ப்பதற்காகப் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
அங்கு மறைந்திருந்த பொலிஸார் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைதான சந்தேகநபர்களிடமிருந்து மூன்று கூரிய வாள்கள், இரண்டு மோட்டார்ச் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.