தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்..

மேக்ஷம்

குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.

ரிக்ஷபம்

குடும்பத்திலுள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

மிதுனம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்

பழைய உறவுகளைப் புதுப்பீப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்தவரைச் சந்திப்பீர்கள்.

சிம்மம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்துப் பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும்.

கன்னி

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று பிற்பகல் 4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளைச் சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.

விருட்சிகம்

குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.

தனுசு

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மகரம்

உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

மீனம்

இன்று பிற்பகல் 4.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்து செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

Comments
Loading...