தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று உங்களின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் வெற்றி அடையலாம்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலனே கிட்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கன்னி

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். கடன்கள் குறையும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமாக செயல்படுவது நல்லது.

மகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கும்பம்

இன்று உடல்நிலை பலவீனமாக காணப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

மீனம்

இன்று உறவினர்களால் சுப விரயங்கள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வருமானம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுப காரியங்கள் கைகூடும்.

Comments
Loading...