Designed by Iniyas LTD
வவுனியா சிறைச்சாலையில் நடக்கும் ஊழல் சித்திரவதைக்கு எதிராக ஆராப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் நடக்கும் ஊழல் சித்திரவதை, போன்றவற்றுக்கு எதிராக வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினர் கவனைஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்றையதினம் முற்பகல் 11 அளவில் வவுனியா நீதிமன்றுக்கு முன்பாக இது நடைபெற்றுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்
தாமாகவே எதிர்த்துக் குரல்கொடுக்க முடியாத விளக்கமறியல் கைதிகள் சார்பிலே, சட்டத்தரணிகளாகிய தாங்கள் அந்தப் பிரச்சினைகளை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தும் முகமாகவே, இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளதாக வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மு.சிற்றம்பலம் ,தெரிவித்துள்ளார்.
விளக்கமறியல் சிறைக்கூடம் வவுனியாவில் உருவாக்கப்பட்டதன் நோக்கம் வட மாகாணத்திலிருந்து வெளியே செல்ல முடியாத மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையிலும்,
அநுராதபுரம் சென்று தமது உறவுகளைப் பார்ப்பது கடினம் என்ற காரணத்திற்காகவுமே என அவர் சுட்டிக்காடியுள்ளார்.
லஞ்சம்
இந்நிலையில் சிறையில் இருக்கும் கைதிகள் வெளியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பை எடுப்பதானால் ஒரு நிமிடத்திற்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும்,
ஒரு வழக்கிலே தண்டம் விதிக்கப்பட்டு நீதிமன்ற சிறைக்கூடத்திலே வைக்கப்பட்ட ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தி விரைவாக வெளியேற வேண்டுமானால், அங்கு இருக்கும் சிறைக்காவலருக்கு நூறு ரூபா கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு விளக்கமறியல் சிறைச்சாலையில் எதனை நீதிமன்றம் தடுக்க நினைக்கிறதோ அது தாராளமாகக் கிடைக்கின்றதாகவும், இந்தநிலை மாறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஏழைகள் துன்புறுத்தப்படுவதும் அவர்களின் பணம் வஞ்சிக்கப்படுவதும் அவர்களை வைத்து ஒரு சிலர் பணம் சம்பாதிக்கும் நடவடிக்கைகளும் நிறுத்தபட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேலும் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வும் ஏற்படவேண்டும் என்பதற்காவே இந்தக் கவன ஈர்ப்பை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோரிக்கை
தாம் 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றதாகவும், அதில் ஒன்று சிறைச்சாலை கடமையில் ஈடுபடும் அத்தனை உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டு புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒரு நம்பகமான பாரபட்சமற்ற விசாரணைக் குழுவை அமைத்து சிறைசாலையில் நடக்கும் அநீதிகளுக்கு சாட்சியங்கள் மூலம் ஒழுக்காறு நடவடிகை எடுக்க வேண்டும்.
மூன்றாவது இந்த இரண்டையும் அவர்கள் செய்யத்தவறினால் இந்த சிறைச்சாலையையே அவர்கள் மூடிவிடவேண்டும் என்பதே அவை எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் தேவைக்கே உருவாக்கப்பட்ட சிறைச்சாலையில் நடக்கின்ற அநீதிகளை தாம இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
