Designed by Iniyas LTD
இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றதை அடுத்து யூரோவுக்கு எதிரான பவுண்டின் பெறுமதி அதிகரித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றதை அடுத்து யூரோவுக்கு எதிரான பவுண்டின் பெறுமதி அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மக்ரோன் வெற்றி பெற்றால் பவுண்டின் பெறுமதி சரிவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பிரதான எதிரணி வேட்பாளர் வெற்றி பெற்றால் பவுண்ட் பெறுமதி அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டிருந்தனர்.
எனினும் மக்ரோன் வெற்றி பெற்றதை அடுத்து கணிப்பாளர்களின் முடிவு தோல்வி அடைந்துள்ளது. அத்துடன் பங்குச்சந்தையில் மக்ரோன் வெற்றியின் தாக்கம் எதிரொலித்தது.
இந்நிலையில், யூரோவுக்கு நிகரான பவுண்டின் பெறுமதி சுமார் 0.4% வீதமாக அதிகரிக்கவும் செய்தது.