தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்ஸில் பெண் பொலிஸார், தமிழர்களின் கலாச்சாரத்தை தலையில் சுமந்துள்ளனர்…..!

பரிஸில் பெண் பொலிஸார் நடந்த கொண்ட விதம் தமிழர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியங்கள் சில தமிழர்களாலேயே புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், பிரான்ஸ் பெண் பாதுகாப்பு அதிகாரிகளின் செயற்பாடு வியக்க வைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான தமிழ் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர்த் திருவிழாவின் போது பரிஸ் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர் .

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸார் தமிழ்ப்பெண்கள் அணிவது போல தலையில் பூமாலை அணிந்து காணப்பட்டனர்.

பாதுகாப்பு சீருடையில் ஆயுதம் தாங்கிய பெண் பொலிஸார், தமிழர்களின் கலாச்சாரத்தை தலையில் சுமந்து நின்றமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

Comments
Loading...