தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரணைத்தீவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்கப்பட  உள்ளது

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை  மீட்டுத்தருமாறு கோரி கடந்த  ஒருவருடத்துக்கு மேலாக  இரணைத்தீவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  இரணைத்தீவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்கப்பட  உள்ளதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கயந்தகருணாதிலக, அரசாங்கம் இரணைத்தீவு விடயத்தில் அவதானம் செலுத்தி இருப்பதாக கூறியுள்ளார்,

மேலும் இரணைதீவு  மக்களுக்கான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தற்போது   இரணைத்தீவில் தற்காலிக கூடாராங்களை அமைத்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...