Designed by Iniyas LTD
இரணைமடு குளத்தில் மீன்பிடிக்க படையினர் தடைவிதித்து வருகின்றனர்
இரணைமடு குளத்தில் உள்ளுர் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் தொடர்ந்தும் முட்டுக்கட்டை போட்டுவருகின்ற நிலையில் அவ்வாறு தடை விதிக்கப்படவில்லையென இலங்கை இராணுவம் தற்போது தெரிவித்துள்ளது.
இரணைமடு வாவியில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளில் அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் மாத்திரமே மேற்கொள்ளமுடியும். அவ்வாறு அங்கத்துவம் பெறாதவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படுவதில்லை. விசேடமாக, வெளி பிரதேசங்களில் இருந்து வருபவர்களுக்கு அங்கு மீன்டிபிடியில் ஈடுபட அனுமதியளிக்கப்படுவதில்லை. அந்த பிரதேசத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தவுமே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரணைமடு வாவியில் மீனவர்களின் செயற்பாடுகளுக்கு இராணுவத்தினரால் எந்தவிதமான இடையூறுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரணைமடுவில் அமைந்துள்ள வன்னி கட்டளை மைய பாதுகாப்பின் பிரகாரம் குளத்தில் மீன்பிடிக்க படையினர் தடைவிதித்தே வருகின்றனர். கிளிநொச்சிக்கு வருகை தரும் மஹிந்த இம்முகாமில் தங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.