தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரணைமடு நீர்விநியோகதிட்ட கூட்டம் இன்று.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

jj

 இன்று காலை 10மணிக்கு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிய இந்த விசேட கலந்துரையாடல் பிற்பகல் வரை இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த விசேட பொது கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும் குறித்த விசேட கலந்துரையாடலானது இரணைமடு நீர்விநியோகத்திட்டம் தொடர்பில் தீர்வுகளை எட்டுவதற்காகவே கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கிளிநொச்சிக்கு சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...