Designed by Iniyas LTD
போக்குவரத்து நெருக்கடியில் ஒட்டுசுட்டான் செல்லும் ஆசிரியர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு பிற இடங்களில் இருந்து ஆசிரியர்கள் சென்று வருவதில் பெரும் இடர்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 60 ஆசிரியர்கள் வரையில் தினமும் இங்கு வந்து கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரச பணியாளர்களுக்கான பேரூந்து சேவைகள் மாங்குளம் வழியாக துணுக்காய்க்கு மட்டுமே இடம்பெறுவதால் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் பகுதிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இடர்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் முத்துஐயன்கட்டிலுள்ள பாடசாலைகள் ஆகியவற்றுக்குப் பணி நிமித்தம் செல்லும் ஆசிரியர்களும் உத்தியோகத்தர்களும் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் இடம்பெறும் அரச பேரூந்து சேவை ஒழுங்காக இடம்பெறாத காரணத்தால் இவர்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்வதhக கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பேரூந்துக்காகஒவ்வொரு நாளும் மாங்குளம் சந்தியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலத்தையும் எதிர்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.