தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரண்டு நாட்கள் தாமதமாக மோடிக்கு பிறந்ததின வாழ்த்தைத் தெரிவித்த மகிந்த

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17ம் திகதி தனது 64 வது பிறந்த தினத்தை மிகவும் எளிமையாக கொண்டாடியிருந்தார். அவருக்கு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் தாமதமாக நேற்றே மோடிக்கு தனது பிறந்ததின வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.makintha

மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடிக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது பிறந்த நாள் ஒரு அற்புதமான தினமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்,” என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார்.

Comments
Loading...