Designed by Iniyas LTD
இராக்கில் ஆயிரத்து நூறு இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது
இராக்கில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் குறைந்தது ஆயிரத்து நூறு இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள ஐநா அலுவலகம் கூறுகின்றது. கொல்லப்பட்டவர்களில் 600க்கும் அதிகமானவர்கள் பொதுமக்கள் என்றும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
மேலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கடந்த மாத வன்முறைகளில் காயமடைந்துள்ளனர். இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இராக்கின் பெரும்பகுதிகளை ஐநாவின் இந்த புள்ளிவிபரங்கள் உள்ளடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.