தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பஞ்ஷேர் பள்ளத்தாக்குப் பகுதியில் புதிய பனிச்சரிவுகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடக்காக உள்ள பஞ்ஷேர் பள்ளத்தாக்குப் பகுதியில் புதிய பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அண்மைய நாட்களில் நடந்துள்ள பனிச்சரிவுகளிலும் பனிப்புயல்களிலும் சிக்கி கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று அச்சங்கள் உள்ளன.afghanistan

ஏற்கனவே பனிச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கான பாதைகளை திறக்கும் முயற்சிகள் ஓரளவே வெற்றியளித்துள்ளதாக மாகாண ஆளுநர் கூறுகின்றார். பனிச்சரிவுகள் மற்றும் பனிப்புயலில் கொல்லப்பட்டவர்களுக்காக மூன்றுநாட்களுக்கு தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தேசிய பேரழிவு என்று இந்த அழிவுகளை வர்ணித்துள்ள அதிபர் அஷ்ரப் கானி, இரானுக்கான தனது விஜயத்தை ரத்துசெய்துள்ளார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும் உணவுப் பொதிகளை வழங்கவும் ஆப்கன் விமானப்படையினர் முயன்றுவருகின்றனர்.

Comments
Loading...