Designed by Iniyas LTD
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தினால் இலங்கை அரசியலில் கொந்தளிப்பு..
வடக்கு கிழக்கில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டுமென யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருதார்.
இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்தினால் இலங்கை அரசியலில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியிருக்கின்றது.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனவும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியிருந்தனர்
அதோடு ஆளும் கட்சி உறுப்பினர்களும் ,ஐக்கியதேசியக் கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்குத் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இதனால், ஏற்பட்ட குழப்ப நிலையால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து சட்டத்துக்கு முரணானதாகவிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
