தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுவிட்சர்லாந்தில் மாநகர சபை உறுப்பினராக முதல் முதலாக ஈழ தமிழர் …

சுவிட்சர்லாந்தின் ZUG மாநகர சபை உறுப்பினர்களிற்கான தேர்தலில், முதல் முதலாக ஈழத்தமிழர் ஒருவர் சோசலிச ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

15 வயதில் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த ரூபன் சிவகணேசன் என்ற தமிழரே மாநகர சபை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரது தெரிவு    இலங்கையில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்து 36 வருடங்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிற்கு கிடைத்த ஓர் மாபெரும் அங்கீகாரமாகும்.

ரூபன் சிவகணேசன் 2006ஆம் ஆண்டு கன்ரோன் ZUG இற்கான மாநில அரச உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டாவர்.

வலதுசாரிகளை பெரும்பாண்மையாக கொண்ட ஓர் மாநிலத்தில் முதலாம் தலைமுறையினரை சார்ந்த ஓர் இளைஞன் முதல் முறையாக 2006இல் மாநில உறுப்பினர்களிற்கான தேர்தலில் வெற்றி பெற்றது ஓர் பெரிய சாதனை.

ரூபன் சிவகணேசன, வெளிநாட்டவர்களின் அரசியல் உரிமைகள், இளைஞர்களின் அரசியல், சூழல் பாதுகாப்பு, தொழிலாளர்களின் உரிமை, போன்ற போராட்டங்களிலும் அனைத்து முன்னெடுப்புகளிலும் தன்னை எப்பொழுதும் முன் நிறுத்தி வந்துள்ளார்.

அது மட்டுமல்லாது சுவிட்சர்லாந்தில் அவ்வப் பொழுது மேலெழும் இனவாதத்திற்கு எதிராக எவ்வித தயக்கமும் இன்றி தனது எதிர்பினையும் கண்டணங்களையும் Swissblacks என்ற அமைப்பின் மூலம் பதிவு செய்து வந்துள்ளார்.

பல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சுவிஸில் தஞ்சமடைந்த அனைத்து இனத்தவர்களிற்கும் பாரபட்சமின்றி தனது சமூக சேவையை 2005இல் இருந்து Asylbrücke என்ற அமைப்பின் ஊடாக வழங்கி வந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் தேசிய நாடளுமன்றத்தில் 7 அமைச்சர்கள் உள்ளனர். அதே வகைப்பட்டு மாநிலங்களிலும் மாநகரங்களிலும் 7 அல்லது 5 அமைச்சர்கள் உள்ளனர்.

ZUG மாநகர சபையில் இந்த 5 உறுப்பினர்களிற்கான தேர்தலிலேயே ரூபன் சிவகணேசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...