Designed by Iniyas LTD
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கில் பெரியளவிலான விகாரை…
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கில் பெரியளவிலான விகாரை ஒன்றும், இரு இடங்களில் புத்தர் சிலைகளும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் விடுவிக்கப்படாத பகுதியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் சட்டவிரோதமாக குறித்த வ்விகாரை அமைக்கப்ப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விகாரை இராணுவத்தினர் வழிபடவே அமைக்கப்படடதாகவும், . இராணுவத்தினர் அந்த நிலத்தை விட்டு வெளியேறும் போது விகாரை அங்கு இருக்காது என்றும் அவர்கள் உறுதியளித்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் தற்பொழுது மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டபோதும், புத்தர் சிலைகளும், விகாரையும் அகற்றப்படவில்லை என அங்குசென்ற மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.