தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் தீ விபத்து – தொழில்சாலை முற்றாக சேதம்

வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது

எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்  ,இந்த தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலை முழுவதுமாக எரிந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின் ஒழுக்கின்   காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அழிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

எனினும் இதன் முழுமையான சேதவிபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் வவுனியா நகர சபை தீ அணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...