தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவத்தினர் எவரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை – பிரிகேடியர் சுமித் அத்தபத்து..

இராணுவத்தினர் எவரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்,

யுத்தகாலத்தில் இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு பக்கத்திலும் தவறுகள் இடம்பெற்றதாகவும்,  தற்போதும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழ்கின்ற நிலையில்,

இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்துவது ஏற்கப்பட முடியாது என  குறிப்பிட்டிருந்தார்.

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவ வீரர்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.

அதோடு  இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும்  எனவும்  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதுவரை காலமும் இராணுவத்தினர் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபடவில்லை என்றே அரசதரப்பினர்  கூறிவந்த நிலையில்,  ஜனாதிபதியின்  இந்த கருத்தின் ஊடாக இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்  குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று இராணுவ ஊடகப் பேச்சாளர்  கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...