Designed by Iniyas LTD
வடக்கு, கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணி விடுவிப்பு..
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் 400 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவத்தினருக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் நிதிக்கு அமையவே குறித்த காணி விடுவிப்பு இடம்பெறும் என இராணுவம் முன்னதாக அறிவித்திருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
இதற்கமைய, குறித்த நிதி கிடைக்கப் பெற்றதும் மேலும் 400 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.