தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவ ரக் மோதியதில் மூவர் பலி – கிளிநொச்சியில் சம்பவம்..

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில்  அதில் பயணித்த மூன்று பேர்  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் , கரந்தையைச் சேர்ந்த குகன் , மற்றும்  சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

Comments
Loading...