Designed by Iniyas LTD
இராமேஸ்வர விசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்
இராமேஸ்வர விசைப்படகு மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத 76 படகுளையும் ஆறு மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அதிக தண்டனை மற்றும் படகுகளை அரசுடைமையாக்கப்படும் என்ற அமைச்சர் மஹிந்த அமரவீராவின் கருத்திற்கு மத்திய அரசு ஸ்ரீலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் எனவும், அத்தோடு, பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, இன்று நாகை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த போராட்டத்தினால் சுமார் 4 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும், 50 ஆயிரம் மீன்பிடிசார் தொழிலாழர்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2 கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நாகைமாவட்டத்தில் இடம்பெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை, நாகை, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டத்ததை சேர்ந்த மீனவர்கள் பங்குபற்றுவதோடு, போராட்டத்தின் முடிவில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளதாகவும் அனைத்து மீனவசங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன.