தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் குடியரசு தின கொண்டாட்டம்

தேனாம்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.DWAR

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஞானதேசிகன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், இலபாஸ்கர், ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர் வி.எம். அரவணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சைதை மானோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தென்சென்னை மேற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் நெற்குன்றத்தில் மாவட்ட தலைவர் இ.சி.சேகர் முன்னிலையில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி மாணவ – மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் பாலாஜி, சந்தானம், சிவக்குமார், புரசை நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோகுலம் மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தரமணியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் கோவிந்தராஜ் காவல் துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, தேசியக் கொடியினை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அரசுத்துறையின் சார்பில் 68 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் சைதை துரைசாமி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 4 பள்ளிகளை சேர்ந்த 250 மாணவ – மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் வருவாய் துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, நிர்வாகத் துறை ஆகியவற்றை சேர்ந்த 68 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் விக்ரம் கபூர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சென்னைக் குடிநீர் வாரிய செயல் இயக்குநர் சந்தீப், அதிகாரிகள் மணிவண்ணன், லட்சமணன், முருகேசன் கலந்து கொண்டனர். மாநகர் போக்குவரத்து கழகத்தின் தலைமையிடமான பல்லவன் இல்லத்தில் மேலாண் இயக்குனர் பாலகிருஷ்ணசாமி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி.யின் தென் மண்டல அலுவல கத்தில் தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கொடியேற்றினார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் பழனிச்சாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தேசிய கொடியை ஏற்றினார். விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னி கோத்ரி, எம்.ஜெயச்சந்திரன், ஆர். சுதாகர், எஸ்.தமிழ்வாணன் பரிசு ஆகியோர் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், கே.கே.சசிதரன், எஸ்.விமலா, ஜி.சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அயனாவரத்தில் உள்ள ஆர்.பி.எப். மைதானத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி தேசிய கொடி ஏற்றினார். அவர் ரெயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

Comments
Loading...