Designed by Iniyas LTD
இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட இரசாயன கட்டுப்பாட்டளர் ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை, பெல்லப்பிட்டிய இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட இரசாயன கட்டுப்பாட்டளர் இருவரையும் மீண்டும் எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹொரணை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த இறப்பர் கைத்தொழிற்சாலையில் கடந்த 19ம் திகதி ஏற்பட்ட அனர்த்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
நச்சு வாயு
அமோனியா அடங்கியுள்ள தாங்கியில் விழுந்த , ஊழியரை காப்பாற்றச் சென்றவர்களும் நச்சு வாயுவை சுவாசித்ததால் அந்த தாங்கியில் விழுந்து உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் இரசாயன கட்டுப்பாட்டளர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.