தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதலை நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்

சாவகச்சேரி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நாவற்குழியில் கடந்த வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த சிலரால்  தாக்கப்பட்டிருந்தார்.

தலையில் பலத்த காயங்களுக்குள்ளான அவர், சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந் நிலையில் குறித்த சமபவம் தொடர்பில்  விரைவான விசாரணைகளை  முன்னெடுக்க  வலியுறுத்தி   பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...