Designed by Iniyas LTD
இறுதிப்போரில் 200 புலித் தலைவர்கள் தப்பிச்சென்றுவிட்டனராம்! மங்கள
2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுடன் சிங்கள ராணுவம் இறுதி கட்ட போரில் ஈடுபட்டபோது ஏராளமான விடுதலைப்புலிகள் தப்பி சென்றதாக தகவல் வெளியாகின.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அறிவித்தாலும் அவரும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
மேலும் பொட்டு அம்மான் போன்ற முக்கிய தளபதிகளும் தப்பி சென்று இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் இறுதிகட்ட போரின்போது ராணுவ அதிகாரி ஒருவருக்கு ஏராளமாக பணத்தை கொடுத்து 200 விடுதலைப்புலிகள் தப்பி சென்றுவிட்டதாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சரமவீரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, தப்பிய ஓடிய 200 பேரில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களும் உள்ளனர். அந்த போரின்போது பல தமிழர்கள் காணாமல் போனதாக கூறுகிறார்கள். இப்படி தப்பி ஓடியவர்களையும் அதில் சேர்த்துள்ளனர். எனவே காணாமல் போனவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டவர்களாக கருத முடியாது என தெரிவித்துள்ளார்.